இல் லாத ஒன் று Absence

இல் லாத ஒன் று

இரவு மின் விளக்குகளில்
வெளிச்சம் பூத்துக்கிடக்கிறது
மைதானத்தின் குட்டையான
 
வேலிக்கம்புகளுக்குள்
ஆட்டு மந்தைகள்
அருகம் புல்லைக் கடிப்பதும்
இளிசறி இலைகளை ருசித்தபடியும்
சும்மா படுத்திருக்கின் றன
இயல்பை நேர்த்தி செய்தவாறு
 
அவற்றிற்கிருக்குமா
சுட்டு வலிக்கின் ற ரகசிய ஞாபகங் கள்
இல் லாத ஒன் றுக்கான ஏக்கம்
நாளாந்தம் எண் ணங் கள் வைத்து
நினைவும் மறதியும் ஆடுகிற சூதாட்டம்
 
கைதவறிச் சிதறிப்போகிற தேநீ ர்க்குவளை
தலைக்குமேல் மிதந்து திரிகிற பூச்சிறகு
அல் லது வெறும் அசைவற்ற ஒரு வெளி
எவ் விதமாகவும்
நான் தோன் றியிருக்கக் கூடும்
உனக்கெதிரில்
 
எவ்வேளையும் பிசகாமல்
நீ இருக்கிறாய் என் முன்
எப்போதும் இல் லாத ஒன்றென
 

Absence

Light has blossomed
within the night’s electric lamps.
Corralled by the low fences
of the park, sheep lie listless, chewing
arugam grass and ilisari leaves,
fine-tuning a sense of normality.
 
Do they possess
secret memories that scald and sting?
Thoughts gambling between recollection
and amnesia. Yearning, day upon day.
 
As the teacup that falls
and breaks, as the petal wing
that floats above the head,
or merely as a plain, still void:
in such shapes I might have
appeared to you.
 
Never missing a moment,
you are in front of me.
an enduring absence.
 

Original Poem by

Anar

Translated by

Hari Rajaledchumy with Fran Lock Language

Tamil

Country

Sri Lanka