பெண் Woman

பெண்

மழைக்கு முன் பே
காற்று குளிர்ந்துவிடும்போது
இலைப் பச்சையாக மாறிவிடுகிறேன்
 
அடி நிலத்தின் கீழ்
திரவியமாய் விழைகிறேன்
 
பித்தமேற்றும்
ஆர்ப்பரிக்கும் கடலின்
உப்பை விழுங் கிய ஆகாயம்
 
கனவும் விஷமுமான
மந்திரம் நான்
 
காலங் களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன் றின்
இடதும் வலதுமாவேன்
 
என்னை
எங் கு ஒளித்து வைக்க முடியும்
 

Woman

When the air starts to cool
anticipating rainfall
I morph into leaf-green.
 
I am a burgeoning treasure,
under the earth.
 
I am the sky
that has swallowed up
salt from a mutinous sea.
 
I am a spell
that is both dream
and poison.
 
I am opposing
poles of a word,
sending its war cry
out into time.
 
Where could
I hide myself?
 

Original Poem by

Anar

Translated by

Hari Rajaledchumy with Fran Lock Language

Tamil

Country

Sri Lanka